உலகத்தின் மாசுவின் சுற்றுச்சூழல் சீர்கேடுகளை சரி செய்ய எக்ஸ்னோரா அமைப்பையும், நாட்டின் மாசுவான இலஞ்சத்தை ஒழிக்க ஐந்தாவது தூண் அமைப்பையும் உருவாக்கிய M B நிர்மல் அவர்கள் தமிழ்மொழிக்கு ஏற்படும் மாசுகளை அகற்ற மற்றும் மொழியை பாதுகாக்க மொழி மொழி என்ற அமைப்பையும் உருவாக்கி உள்ளார்.

 

"மொழி "மொழி"ச் சேவையில் மொழி 'மொழி' பெட்டிப் பேச்சாளர்கள் மன்றம்"

இயக்கத்தின் நான்கு வகையான மொழிச் சேவைகளையும் செயல் திட்டங்களால் பரப்ப மொழி, "மொழி" பெட்டிப் பேச்சாளர்கள் இந்தத் துணை அமைப்பைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். நல்ல வாய்ப்பாகக் கருத வேண்டும். குறிப்பாக "வீட்டு மொழி தமிழ், பேச்சு மொழி தமிழ்" என்ற சேவையைத் தொடர்ந்து செய்ய வேண்டும்.

மொழி, "மொழி" மேடை மூலம் விழிப்புணர்வு:

பெட்டிப் பேச்சாளர்கள் வெட்டிப் பேச்சுப் பேசமாட்டார்கள். அவர்கள் பேசும் ஒவ்வொரு வார்த்தையும், பொன் போன்று இருக்க வேண்டும். அந்தக் கூட்டத்தில் தமிழ்மொழி வளர்ச்சி மட்டுமின்றி, உறுப்பினர்களின் அறிவை வளர்க்கவும், அங்கு நிகழ்த்தப்படும் பேச்சுகள் இருக்க வேண்டும். அது மட்டுமல்ல; சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்காக உருவாக்கப்பட்ட “புத்தெழில் பூமி” ("எக்ஸ்னோரா"). இலஞ்சத்தை ஒழிக்க உருவாக்கப்பட்ட "ஐந்தாவது தூண்", ஜாதி, மத, மொழி பிரச்சினைகளை, பிளவுகளைத் தீர்க்க உருவாக்கப்பட்ட "மா" இயக்கம், எளிமையே ஏற்றம் தரும் என்பதைக் கற்றுத் தரும் "இலட்சிய எளிமை" பெண்களைப் பாதுகாக்கும், மேம்படுத்தும் "சர்வசக்தீ" மது அடிமைகள், போதை மருந்து அடிமைகள், சூதாட்டத்தில் ஈடுபடுபவர்களைத் திருத்த ஆரம்பிக்கப்பட்ட "நமக்கு நாம்" இயக்கம். இப்படி சில குடும்ப உறுப்பினர்களின் தவறான செயல்களால் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் ஒன்று சேர்ந்து வலிமை பெற்று தவறான வழியில் செல்பவரை நல்வழிப்படுத்தும் குடும்பங்களின் அமைப்பான "குடும்பங்களின் குடும்பம்" பற்றியும் இக்கூட்டங்களில் தங்கள் உரைகளில் மையப் பொருளாகக் கொண்டு பேசலாம். மனத்தைத் தூய்மைப்படுத்து, வாழ்க்கை வளர்ச்சிக்கு வழிகோலும். "வாழ்க்கையின் ஒவ்வொரு நொடியையும் மகிழ்வுடன் அனுபவி உள் வளர்ச்சி மூலம்" என்று. ((Enjoy Life Every Movement) இயக்கத்தின் நுணுக்கங்களைப் பற்றியும் பேசலாம்.

முக்கியமாக "சுற்றுச்சுவருக்குள் சுற்றுச்சூழல் சொர்க்கம்" என்ற இல்லத்தையே (சிறியதாக இருந்தாலும், பெரியதாக இருந்தாலும் அல்லது மாளிகையாக இருந்தாலும், மண் குடிசையாக இருந்தாலும்) தூய்மையான, பசுமையான சுற்றுச்சூழலை காக்கும் சொர்க்கமாக மாற்றலாம். காண்க

www.homeexnora.org,

மொழி "மொழி" பெட்டி பேச்சாளர்கள் மன்றம்

மொழி "மொழி இயக்கத்தின் ஒரு சிறந்த செயல் நடவடிக்கை

மொழி "மொழி" பெட்டிப் பேச்சாளர்கள் மன்றம் சாலைக்கு ஒன்று குடியிருப்போர் பகுதிகளில், அடுக்குமாடிக் குடியிருப்புக் கட்டிடங்களில், அலுவலகங்களில், தொழிற்சாலைகளில், பள்ளிகளில், கல்லூரிகளில், கல்லூரி விடுதிகளில், கிராமங்களில், கடற்கரைகளில், நதிக்கரைகளில், பூங்காக்களில், விளையாட்டு மைதானங்களில் எங்கும் துவக்கப்பட வேண்டும். மொழியாற்றலை வளர்த்துக் கொள்வது, மொழி "மொழி" இயக்கத்தின் மொழிச் சேவைகளைச் செய்வது ஆகிய பணிகளை மேற்கொள்வார்கள். அதே நேரத்தில் தங்களுக்குத் தாங்களாகவே சுயவளர்ச்சி பெறுவதைக் கண்டு மகிழ்வார்கள். இத்துணை அமைப்பின் பெயர் மொழி - "மொழி - பெட்டிப் பேச்சாளர் மன்றம். மொழி, "மொழி பிரதான கிளைகளின் ஒரு பிரதான துணை அமைப்புகளாக பெட்டிப் பேச்சாளர் அமைப்புகள் திகழும்.

கோஷம்

கூட்டத் துவக்கத்தில் இந்த இயக்கத்தின் நான்கு சேவைகளையும் மூன்று நிமிடமாவது குரல் எழுப்ப வேண்டும். இதோ அந்தக் குரல் வாசகங்கள்

அதே நேரத்தில், இச்சாதனங்களில் தோன்றும் ஒரு சிலரின் தமிழ்மொழிப் "பற்று?" காரணமாக, இந்த சற்றும் சரியில்லாத வார்த்தைகள் இங்கிருந்து நோய்க்கிருமிகள் போல் தமிழ் கூறும் நல்லுலகம் முழுவதும் பரவி, மொழியின் அழிவை மற்ற ஊர்களிலும் பரப்பிவிடுகின்றன. ஆகவேதான் இந்நடவடிக்கையைப் பொறுத்தவரை மிக முக்கிய கவனம் தேவை. ஆனால் ஒரு சில தொலைக்காட்சி அறிவிப்பாளர்கள் நல்ல தமிழில் அழகாக சுவையாகப் பேசுவார்கள். ஆனால் திடீரென்று, கொச்சைத் தமிழில் குப்புற விழுந்துவிடுவார்கள். செய்தி மற்றும் பொழுதுபோக்கு சாதனைகள் பெரும்பான்மையான நேரத்தில் நல்ல தமிழில் நிகழ்ச்சிகளை நடத்தினாலும், ஒரு சில சமயங்களில் இடறிவிடுகிறார்கள். ஒரு குடம் பாலுக்கு ஒரு துளி விஷம் போன்று, ஒரு சிலர் தமிழைச் சிதைப்பதை வாடிக்கையாக்கிக் கொண்டுள்ளார்கள். அந்நிலை மாறியாக வேண்டும், அல்லது நாம் மாற்றியாக வேண்டும். ஒரு வியாபார வானொலியில் தமிழைக் குதறுவதற்கென்றே அவதாரம் எடுத்தது போல் ஓரிருவர் பேசுகிறார்கள். இதை உடனடியாக அவர்கள் நிறுத்த வேண்டும்.

"வாழிய வாழியவே செந்தமிழ் வாழியவே".

"தமிழ் மொழியில் மொழிந்து மகிழ்வித்து மகிழ்"

"மொழி தழைக்க தமிழ் மொழியில் மொழிவோம்"

"மொழி சிறக்க தமிழ் மொழியில் மொழிவோம்"

மின்னஞ்சல் - மொழி, "மொழி"

இது மின்னஞ்சல் யுகம். மின்னஞ்சல் மூலம் மொழி, "மொழி" இயக்கத்தை வளர்த்து மொழியை அனைவரும் முறையே மொழிய ஒரு புதிய வரலாறு படைக்க இச்சாதனம் முழுமையாகப் பயன்படுத்தப்பட வேண்டும்.

மொழி, "மொழி" இணையதளம்

காண்க

www.homeexnora.org,

TD

 

 
Powered by FFMedias