உலகத்தின் மாசுவின் சுற்றுச்சூழல் சீர்கேடுகளை சரி செய்ய எக்ஸ்னோரா அமைப்பையும், நாட்டின் மாசுவான இலஞ்சத்தை ஒழிக்க ஐந்தாவது தூண் அமைப்பையும் உருவாக்கிய M B நிர்மல் அவர்கள் தமிழ்மொழிக்கு ஏற்படும் மாசுகளை அகற்ற மற்றும் மொழியை பாதுகாக்க மொழி மொழி என்ற அமைப்பையும் உருவாக்கி உள்ளார்.

 

ஒரு யோசனை

மிகச் சிறந்த மொழியாக தமிழில் சற்று அழுத்தம் நிறைந்த எழுத்துக்களுக்கு இடம் தரப்படவில்லை. உதாரணமாகச் சொல்வதென்றால், இந்தியிலும் பிற மொழியிலும் க,ச,ட,த,ப போன்ற எழுத்துக்கள் நான்கு வகையில் உச்சரிக்கப்படுகின்றன. தமிழில் ஒரே உச்சரிப்புத்தான். அதனால் சில பிரச்சினைகள் உருவாகுவதுண்டு. என்னுடைய முழுப்பெயர் தமிழில் ம.பா.நிர்மல். நான் பணியாற்றிய வங்கியில் என் பெயர் M.B.நிர்மல். ஆனால் தமிழில் எழுதும் போது அது M.P.நிர்மல் என்றே உச்சரிக்கப்படுகிறது, அதாவது வி.றி.நிர்மல் என்று.

ஒரு கூட்டத்திலே விவரம் தெரியாதா ஒருவர் "M.P.நிர்மல், நிர்மல் வி.றி. ஆவது எப்போது?" என்று கேட்டு ஏதோ நகைச்சுவை கூறியது போல் அட்டகாசமாக சிரித்தார். நான் உடனே எழுந்து சொன்னேன், அது M.P. அல்ல அது M.B.என்று. "பீ" என்ற தமிழ் எழுத்தை "P" என்ற உச்சரிக்க வேண்டி வரும் போது அந்த எழுத்துக்களுக்கு கீழே ஒரு சிறு கோடு போடக்கூடாது. (பி) அப்படி போட்டால் அந்த எழுத்தை அழுத்தி உச்சரிக்க வேண்டும் (B) என்று பொருள்.

மும்பை என்று உச்சரிக்கும் பொழுது கடைசி எழுத்து பை. அதாவது நாம் கையில் எடுத்துச் செல்லும் பை போன்றே உச்சரிக்கப்படுகிறது (Pai). உண்மையில் அது Bai. இது போன்ற தருணங்களில் மும்பை என்ற சொல்லில் கடைசியில் ப என்ற வார்த்தையில் ஒரு கோடு போட்டால், அந்த உச்சரிப்பு சரியானதாக அமையும் அல்லவா! அது போன்றுதான் வார்தா, திருவனந்தபுரம், புவனேஷ்வர், அலகாபாத், டிபன்ஸ் காலனி, குண்டூர். இப்படி சிறு மாற்றம் செய்வதன் மூலம் மற்ற ஊரின் பெயர்களை தமிழர்கள் தவறாக உச்சரிக்கிறார்கள் என்று கருத இடமில்லாமல் போகும்.

பிரபல நடிகை ஷில்பா ஷெட்டி பங்கேற்ற பிக் பிரதர் (Big Brother) நிகழ்ச்சி பிரபலமானது. இந்நிகழ்ச்சியின் பெயரைத் தமிழில் உச்சரித்துப் பாருங்கள் பிக் என்கிற போது அது தமிழில் Pig என்றே உச்சரிக்கப்படும். அதே போன்றுதான் பிரதர் (Brother என்றல்ல). பிக் பிரதர் என்று எழுதினால் சரியாக உச்சரிக்கப்படுமல்லவா. இந்நிகழ்ச்சியில் நிற வேற்றுமையைக் காட்டிய நடிகையின் பெயர் ஜேன் கூடி (Jane Goody). தமிழல் கூடி என்றால் கூடுவதைக் குறிக்கிறது. ஆங்கிலத்தில் உச்சரிப்பே வேறு. ஏன் கூடி என்று எழுதுதல் கூடாது. அதனால் அவரை Goody என்றழைக்கப்படுவார்.

 

 

 
Powered by FFMedias