உலகத்தின் மாசுவின் சுற்றுச்சூழல் சீர்கேடுகளை சரி செய்ய எக்ஸ்னோரா அமைப்பையும், நாட்டின் மாசுவான இலஞ்சத்தை ஒழிக்க ஐந்தாவது தூண் அமைப்பையும் உருவாக்கிய M B நிர்மல் அவர்கள் தமிழ்மொழிக்கு ஏற்படும் மாசுகளை அகற்ற மற்றும் மொழியை பாதுகாக்க மொழி மொழி என்ற அமைப்பையும் உருவாக்கி உள்ளார்.

 

மொழிக்கல்வி அவசியம்

நடைபாதையில் வசிக்கும் தமிழர்கள், தமிழின் கழுத்தை நெருக்குகிறார்கள் என்று வருந்தும் பலர், அப்படிப் பேசுபவர்கள், கல்வி அறிவு இல்லாதவர்கள், பள்ளிக்குச் செல்லாதவர்கள் என்பதை உணர்ந்து அவர்களுக்கு நல்ல தழிழைச் சொல்லிக் கொடுக்க முன் வருவது இல்லை. அப்படி முயற்சி செய்யாமலேயே குறை கூறுவது தவறாகும். மொழி "மொழி" இயக்கம் அவர்களை நல்ல தமிழில், பண்பான தமிழில் பேச முயற்சிகள் மேற்கொள்ளும்

உயர்மட்டக்குழ

தமிழ் ஆர்வலர், தமிழ்க் காவலர், தமிழ்ப் புரவலர் அடங்கிய உயர்மட்டக்குழு ஒன்றை அமைக்க வேண்டும். அக்குழு மாதமொருமுறை கூடும். அக்கூட்டங்களிலும் தூய தமிழ் வார்த்தைகள் பத்தாவது அறிமுகப்படுத்த வேண்டும். அவ்வார்த்தைகளை அடிக்கடி பயன்படுத்த வேண்டும். மொழி "மொழி" பிரதான கிளைகள் ஒவ்வொரு சாலையிலும், குடியிருப்போர் பகுதிகளிலும், அடுக்குமாடிக் குடியிருப்புகளிலும், அலுவலங்கங்களிலும், தொழிற்சாலைகளிலும், கல்விக்கூடங்களிலும் ஆரம்பிக்கப்பட வேண்டும். இவை அனைத்தும், மாவட்ட அளவில் ஒரு கூட்டமைப்பாக மொழி, "மொழி" சங்கமம் என்று அழைக்கப்படும்.

 

 

 

 
 
Powered by FFMedias