உலகத்தின் மாசுவின் சுற்றுச்சூழல் சீர்கேடுகளை சரி செய்ய எக்ஸ்னோரா அமைப்பையும், நாட்டின் மாசுவான இலஞ்சத்தை ஒழிக்க ஐந்தாவது தூண் அமைப்பையும் உருவாக்கிய M B நிர்மல் அவர்கள் தமிழ்மொழிக்கு ஏற்படும் மாசுகளை அகற்ற மற்றும் மொழியை பாதுகாக்க மொழி மொழி என்ற அமைப்பையும் உருவாக்கி உள்ளார்.

 

தவிர்க்கும் தமிழ்

மேலே படித்தது சமஸ்கிருதத் தமிழ் இப்படி எழுதுவதில் எவ்வித பயனுமில்லை. அதே நேரத்தில் ஊடுருவி ஒன்றிவிட்ட வழக்கத்திலிருக்கும் சமஸ்கிருத வார்த்தைகளைக் களைய வேண்டிய அவசியம் இப்போது தேவையில்லை. அதே நேரத்தில் மற்ற மொழிகளுக்கு இணையாக இன்னும் வழக்கிலிருக்கும் தமிழ் வார்த்தைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து அவ்வார்த்தைகளைப் பிரபலப்படுத்தலாம். உதாரணமாக மகிழ்ச்சி என்ற நல்ல தமிழ் வார்த்தையைப் பயன்படுத்தி சந்தோஷம் என்ற பிறமொழி வார்த்தையைத் தவிர்க்கலாம். அதே நேரத்தில் மிகப் பொருத்தமாக இருக்கும் பிற மொழி வார்த்தைகளைப் பயன்படுத்தலாம். உதாரணமாக இந்நூலிலேயே நிறைய பிறமொழிச் சொற்கள் இடம் பெற்றுள்ளன. அவைகளைப் பயன்படுத்தக் காரணம் கூறியவற்றை அப்படியே கூறும் போது கேட்பவருக்கு நன்றாக புரியும் வகையில் அச்சொற்கள் இருக்கிறது என்பதே.

பிற மொழிச் சொற்கள்

என்னுடைய கோணத்திலிருந்து மட்டுமல்ல, படிப்பவர்கள் கோணத்திலிருந்தும்தான். என்னுடைய பணி, என்னுடைய அனுபவத்தையும் ஓரளவு அறிஞர் பெருமக்கள் உதவியால் பெற்ற அறிவால் பரப்புவது, பகிர்ந்து கொள்வது. அச்செய்திகளை மக்களுக்குக், குறிப்பாக பாமர மக்களுக்குச் சென்றடையும் வகையில் அவர்களுக்குப் புரியும். மொழியில் கூறுவது, "நிதி", "கருணை", "மூர்த்தி", "உதயம்", "தாஸன்", "சாமி", "லாவண்யம்", "போதனை", "சம்பவம்", "சங்கதிகள்", "முக்கியம்", "பிராதானம்", "விசேஷம்", "பிரயோஜனம்", "சங்கீதம்", "பிரியம்", "கோஷம்" போன்ற வடமொழிச் சொற்களுக்கு நிச்சயமாக தமிழ் மொழியில் வார்த்தைகள் இருக்கின்றன. ஆனால் சில சந்தர்ப்பங்களில், சூழ்நிலைகளில் பிறமொழிச் சொற்கள் பொருத்தமாக இருக்கின்றன, புரியவும் வைக்கின்றன.

குடும்ப உறுப்பினர்கள் எடுத்துக் கொள்ள வேண்டிய உறுதிமொழி

வாழ்க்கையில் முன்னேற மொழிகள் பலக்கற்றாலும் தாய்மொழி தமிழை மறவோம். குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் ஒருவரோடு ஒருவர் எப்பொழுதும் தமிழிலேயே பேசுவோம். பழகு தமிழ் வார்த்தைகளைப் பயன்படுத்தியே பேசுவோம். ஆங்கில வார்த்தைகளைத் தவிர்த்தே பேசுவோம்.

மிருகங்களுக்குக் கூட அந்த அறிவு உள்ளது.

ஒரு நண்பர் தன் தமிழ் நண்பரைச் சந்திக்கச் சென்றார். சென்றவர் அவர் மகனிடம் தமிழில் உரையாற்றி இருக்கிறார். அந்தப் பையன் தலையாட்டிக் கொண்டிருந்தான். பதிலுக்கு அவனுக்குத் தமிழில் பேசத் தெரியவில்லை. அப்பொழுது பையனின் தந்தை வந்தார். அவர் பெருமையுடன் நீங்கள் பேசுவதை என் மகன் நன்றாகப் புரிந்து கொள்வான், "தமிழ் பேசத் தெரியாவிட்டாலும்" என்றார். சென்றவருக்குக் கோபம் வந்துவிட்டது. நாய், பூனைகூட நான் கூறுவதைப் புரிந்து கொள்ளுகிறது. உங்கள் மகனைப் பற்றி நீங்கள் பெருமைக் கொள்ள எதுவுமில்லை என்றாரே பார்க்கலாம்.

பண்பாட்டுப் பாலம் மொழி கலாச்சாரத்தின் கலங்கரை விளக்கே மொழி

பண்பாடு நீடிக்க மொழி உணர்வு தேவை

இன்று மேலை நாடுகளில் வசிக்கும் தமிழர்களிடையே அச்ச உணர்வு காணப்படுகிறது. இந்திய கலாச்சாரம் வேறு, மேலை நாடுகளின் கலாச்சாரம் வேறு. பண்பாடுகள் வேறு, தான் வாழும் சுற்றுச்சூழலுக்கு ஏற்றாற் போல் தன்னை மாற்றிக் கொள்வது மனிதனின் வாடிக்கை. அது இயற்கையே. நான் ஒரு மேலை நாட்டுக்குச் சென்ற பொழுது அங்கு பலர் பத்து ஆண்டுகளுக்கு மேலாகத் தங்கியிருந்து குடியுரிமை பெற்றவர்கள். இந்தியாவிற்குக் குடும்பத்துடன் திரும்பிவிடப் போவதாகக் கூறினார். காரணம் இங்கே 13 வயதிற்கு உட்பட்ட தங்களுடைய பாலகர்கள் மேல் நாட்டின் பண்பாட்டு பாதிப்பிற்கு உள்ளாக்கப்பட்டு தவறான பாதைக்குச் சென்று விடுகிறார்கள் என்ற பயமே காரணம். என்னால் ஒன்றை உறுதியாகக் கூற முடியும். தாய்நாட்டுப் பண்பாடுகள் தொடர்ந்து நீடிக்க, பல தேவைகளில் ஒன்று தாய்மொழி என்ற கருத்தை எவரும் ஏற்றுக் கொள்வார்கள். தாய்மொழியைக் குழந்தைகளுக்குப் படிக்க, பேச, கற்றுத் தந்து தாய்மொழியில் சிறந்த படைப்புகளை, குறிப்பாக நன்னெறி நூல்களைப் படிக்க வாய்ப்பை உருவாக்கிக் குழந்தைகள் வளர்க்கப்படும் நிலையில் அக்குழந்தைகள் பண்பாட்டு இழப்பைத் தடுக்கலாம்.

உதாரணமாக தமிழ்மொழியை எடுத்துக் கொண்டால், தமிழ் மொழியில் எத்தனையோ அறநெறி நூல்கள் உள்ளன. திருக்குறள் ஒன்றே போதும். ஓரளவிற்காகவாவது இந்நூல்களைப் படிக்க அயல்நாட்டுவாழ் தமிழ்க் குழந்தைகள் ஊக்குவிக்கப்பட வேண்டும். அதற்கு தமிழ் மொழி அறிவு அவசியம். இது போன்ற முக்கிய இலட்சியங்களை அடைவதற்காக உருவாக்கபட்ட இயக்கமே "மொழி........மொழி".

புத்தகத்தின் கீழ் வரவேண்டியது

மொழி, "மொழி"

தமிழ்மொழியில் மொழிந்து

மகிழ்ந்து மகிழ்வியுங்கள்

நிர்மல் ஒரு நீருற்று

மொழி "மொழி"

நூலாசிரியர் நிர்மல் பற்றி அறிமுக உரை

அனகை சிவன்

தமிழாளர்களே!

தமிழ் மொழியில் மொழிந்து, மகிழ்ந்து மகிழ்வியுங்கள்

"வீட்டு மொழி தமிழ்", "பேச்சு மொழி தமிழ்"

எக்ஸ்னோரா சேவையைத் தாங்கள் நன்கறிவீர்கள். சுற்றுச்சூழல், சுகாதாரம், சமுதாயச் சேவை என்று மக்களைக் கொண்டே மக்கள் பிரச்சனைகளைத் தீர்ப்பதில் எக்ஸ்னோரா இன்று ஒரு தலைசிறந்த தொண்டு நிறுவனமாகத் திகழ்ந்து வருகிறது. எக்ஸ்னோராவின் தமிழ்ப் பெயர் "புத்தெழில் பூமி"!.

இன்று பல்வேறு தொண்டு நிறுவனங்கள் அமெரிக்காவிலும், இதர வெளிநாடுகளிலும் உருவாகி, இந்திய மண்ணில் அருந்தொண்டாற்றி வருகின்றன. ஆனால், இந்தியாவில் திரு.ம.பா.நிர்மல் என்ற தமிழரால் உருவாக்கப்பட்ட எக்ஸ்னோரா இயக்கம், இந்தியாவில் மட்டுமின்றி அயல்நாடுகளிலும் விரைந்து வேகமாக வளர்ந்து வருகிறது.

குறிப்பாக "சூடாகும் பூமி" மாறும் சீதோஷண நிலை இன்று பெரும் பீதியைக் கிளப்பியுள்ளது. பத்து ஆண்டுகளில் பாதி உலகம் தட்ப வெப்ப நிலை மாற்றத்தால் துருவங்கள் இருக்கும் பனி மலைகளும் மற்றும் இமய மலை, ஹால்ஸ் பனி மலைகளும் உருகிவிடும் பேராபத்து ஏற்பட்டுள்ளது. இன்னும் சொல்லப்போனால் அவை வேகமாக உருக ஆரம்பித்துவிட்டன. இதனால் கடல் மட்டம் உயர்ந்து, கடரோர நகரங்களும், கிராமங்களும் கடல் நீரால் பெரும் ஆபத்திற்கு உள்ளாக இருக்கின்றன. இந்த நிலையில் திரு.நிர்மல் அவர்கள் கண்டுபிடிப்பான "இல்ல யோகா எக்ஸ்னோரா" (Home Yoga Exnora).அலகத்தின் சூட்டை தணிக்க ஒரு சிறந்த விடையாக உலக சுற்றுச்சூழல் வல்லுனர்களால் கருதப்படுகிறது. அதற்கு நிர்மல் அவர்கள் சூட்டிய தலைப்பு "சுற்றுச்சுவருக்குள் சுற்றுச்சூழல் சொர்க்கம்". இக்கணமே காண்க www.homeexnora.org என்ற இணைய தளத்தில் சென்று பாருங்கள். தமிழ் மணம் வீசும் இல்லத்தில் சுற்றுச்சூழல் சிறப்பாக இருக்க வேண்டும் என்பது நிர்மலின் கருத்து கணம்.

தானொரு இந்தியன் என்பதில் பெருமையடையும் நண்பர் நிர்மல், தன் தாய் மொழி தமிழ் என்பதில் பெருமகிழ்ச்சியடைகிறார். பெரியபுராணம் அருளிய சேக்கிழார் பெருமான் உதித்த அதே குன்றத்தூரில் பிறந்தவர் நிர்மல் அவர்கள். சிவனடியார்களை, சிவன் தொண்டர்களைப் பாராட்டி பெரியபுராணம் எழுதிய சேக்கிழார் வழியைப் பின்பற்றி சமுதாயத் தொண்டர்களைப் பாராட்டி மகிழ்பவர் நிர்மல். அதனால் இன்று அவர் பல்லாயிரக்கணக்கான தொண்டர்களைத் திரட்டி சமுதாயத் தொண்டில் ஈடுபடுத்தி வருகிறார். அவர் அடிக்கடி கூறுவது "எனக்கு ஒரே ஒரு திறமை மட்டுமே இருக்கிறது. அது திறமைகளை அடையாளம் காணும் திறமை. அவர்கள் திறமையைப் போற்றும் திறமை". இவர் கொடுத்த பாராட்டால், ஆதரவால் பல்லாயிரக்கணக்கான தொண்டர்கள் உருவாகியுள்ளார்கள். அவர்கள் அனைவரும் உயர்ந்த சிந்தனை பெற்று சமுதாயத்தை உயர்த்தி வருகிறார்கள். சமுதாயத் தொண்டு மட்டுமின்றி தமிழ்மொழியின் முன்னேற்றம், தமிழர்களின் வளர்ச்சி இரண்டிற்கும் தன் நேரத்தில் கணிசமான பகுதியை அவர் பயன்படுத்தி வருகிறார்.

திரு.நிர்மல் அவர்கள் தமிழ் வளர்த்த குடும்பத்தில் உதித்த தமிழர். இவர் தந்தை திரு.பாசு அவர்களும், தாயார் திருமதி.சரஸ்வதி பாசு அவர்களும் மிகச்சிறந்த இதழாசிரியர்களாகத் திகழ்ந்தவர்கள். தமிழ்கூறும் நல்லுலகின் முதல் பெண் இதழாசிரியை என்ற பெருமைக்குரியவர் இவருடைய அருமை அன்னை திருமதி.சரஸ்வதி பாசு ஆவார். இவர் பாட்டனார் திரு.சிவபாதமும், பாட்டி திருமதி ஜீவரத்தனம்மாளும் நாட்டுப்பற்று உடையவர்கள். நிர்மல் தந்தை அவர்கள் பிறந்த தினத்தன்று சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்ட திரு.பூபேதிரநாத் பாசு என்ற சுதந்திரப் போராட்ட வீரர் கைது செய்யப்பட்டார். அன்று பிறந்ததால் அவர் பெயரையே நிர்மல் தந்தைக்குச் சூட்டப்பட்டு சுருக்கமாக பாசு என்றழைக்கப்பட்டார். "நாங்கள் இந்தியர், எந்த மொழி பேசுபவர்களுக்கும் எங்கள் இதயத்தில் இடமுண்டு" என்ற பரந்த உள்ளம் கொண்டிருந்தவர் திரு.நிர்மலின் பாட்டனார்.

1941-ஆம் ஆண்டில் பாசரசு என்ற இலக்கிய இதழுக்கும், 'கலை'யென்ற திரைப்பட மாதயிதழுக்கும், 1965-லிருந்து "காதம்பரி" என்ற மாத இதழுக்கும் உரிமையாளர்களாகவும், ஆசிரியர்களாகவும் இருந்து நடத்தி வந்தவர்கள் நிர்மலின் பெற்றோர். பிரபல நாவலாசிரியர் திரு.சரத்சந்தரின் நூல் ஒன்றைப் படித்துக் கொண்டிருந்த நாட்களில் நிர்மலை வயிற்றில் சுமந்தார் அவரது தாயார். மகன் பிறந்தவுடன் தான் படித்த கதையின் நாயகன் பெயரையே தன் மகனுக்குச் சூட்டி மகிழ்ந்தார்.

பெற்றோர்களுக்குத் தப்பாமல் பிறந்த புதல்வர் திரு.நிர்மல் அவர்கள். "தனி மனிதன் முன்னேற்றம்", "சமுதாய முன்னேற்றம்" ஆகியவற்றுக்காக நிறைய நூல்களை தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் எழுதியுள்ளார். இவர் எழுத்துக்கள் அனைத்தும் குமுதம், ஆனந்த விகடன் உட்பட பிரபல தமிழ் வார இதழ்கள் பலவற்றில் வெளியாகியுள்ளன. சாவி பத்திரிகையின் பத்தாவது ஆண்டு விழாவில் சிறந்த எழுத்தாளர் விருதையும் பெற்றார்.

திரு.நிர்மல் அவர்களின் துணைவியார் டாக்டர்.விஜயலஷ்மி ஒரு மருத்துவர். சென்னை மருத்துவக் கல்லூரியில் இயக்குநராக பணிபுரிந்து 2006-ஆம் ஆண்டு ஓய்வு பெற்றுள்ள இவர் மனிதர்களின் உடல் நோய்களை அறிந்து மனிதநேயத்தோடு மருந்து தருபவர். நிர்மல் அவர்களோ நாட்டின் நோய்களை அறிந்து அதற்கு மருந்து கொடுத்து சமூக நோய்களை அகற்றி வரும் சமுதாய மருத்துவர்.

சமுதாயத்தில் மகத்தான மாற்றத்தைக் கொண்டு வந்து மத்திய, மாநில அரசுகள், சர்வதேச நிறுவனங்கள் மற்றும் பத்திரிகைகளின் பாராட்டினைப் பெற்று, விருதுகளைப் பெற்றது திரு.நிர்மல் அவர்கள் உருவாக்கிய எக்ஸ்னோரா பேரியக்கம். "உலகிலேயே வேகமாக வளரும் தொண்டு நிறுவனம் எக்ஸ்னோரா"வாகத்தான் இருக்க முடியும் என்று "இந்தியன் எக்ஸ்பிரஸ்" ஆங்கில நாளிதழ் பாராட்டியுள்ளது.

 

 

 
Powered by FFMedias