உலகத்தின் மாசுவின் சுற்றுச்சூழல் சீர்கேடுகளை சரி செய்ய எக்ஸ்னோரா அமைப்பையும், நாட்டின் மாசுவான இலஞ்சத்தை ஒழிக்க ஐந்தாவது தூண் அமைப்பையும் உருவாக்கிய M B நிர்மல் அவர்கள் தமிழ்மொழிக்கு ஏற்படும் மாசுகளை அகற்ற மற்றும் மொழியை பாதுகாக்க மொழி மொழி என்ற அமைப்பையும் உருவாக்கி உள்ளார்.

 

உலக நலன்

"ஓர் உலகம் ஒரு குடும்பம்"

அன்பான, அமைதியான, ஒற்றுமையான, தூய்மையான, பசுமையான, பாதுகாப்பான உலகை நாம் அடைவது எப்படி? விடை வைத்திருக்கிறார் நிர்மல். அதுதான் ஓர் உலகம், ஒரு குடும்பம். இது ஒரு குடை அமைப்பு அல்லது ஏற்பாடு. உலகம் ஒரு வீடு என்றால் அதில் வாழும் அனைத்து மக்களும் அக்குடும்பத்தின் உறுப்பினர்களே. அந்தக் குடும்ப உறுப்பினர்கள் வாழ்க்கை பயனுள்ளதாகவும், மகிழ்வானதாகவும் இருக்க கடைப்பிடிக்க வேண்டியவற்றை நிர்மல் கண்டுபிடித்துள்ளார். அவர் பரிந்துரைகளைக் கடைப்பிடித்தால் உலகம் மாறிவிடும். அவையாவும் எளிதில் எவரும் கடைப்பிடிக்க கூடியவை, எளிமையானவை. இதோ அந்த கண்டுபிடிப்பு.

01. உலகத்தின் பொது விரோதியை எதிர் கொள்ள எக்ஸ்னோரா

உலகத்திலே வாழும் அனைத்து மக்களுக்கும், உயிரினங்களுக்கும், பொது விரோதியாகக் கருதப்படும் சுற்றுச்சூழல் மாசினைக் கட்டுப்படுத்தவும், மக்கள் தூய்மையான, பசுமையான சுகாதாரத்திற்கு உகந்த சாலைகள், குடியிருப்பு பகுதிகளைத் தங்கள் கூட்டு முயற்சியால் பெற எக்ஸ்னோரா இண்டர்நேஷனல் அமைப்பை திரு.நிர்மல் 1989-ல் தொடங்கினார். இதைத் தொடங்கி வைத்தவர் ஹிந்து பத்திரிகை ஆசிரியர் திரு.என்.ராம் அவர்கள். இன்று எக்ஸ்னோராவின் துணை அமைப்பான சிவிக் எக்ஸ்னோரா கிளைகளின் எண்ணிக்கை ஐம்பதாயிரத்தையும் தாண்டிவிட்டது. பல்லாயிரக்கணக்கான தெருக்களில் அந்தந்தத் தெருவில் வாழும் மக்கள் ஒன்று சேர்ந்து தாங்களாகவே தங்கள் சாலைகளைத் தூய்மையாக மாற்றிப் பராமரித்து வருகிறார்கள். சாலைகளைப் பசுஞ்சோலைகளாகவும் மாற்றிவிட்டார்கள். வீட்டில் உண்டாகும் கழிவுகளைச் செல்வமாக மாற்றுகிறார்கள். தேவையற்றவை, உண்மையில் தேவையற்றவை அல்ல. அது தேவையற்றதாக ஆக்கப்படும் வரை ("waste is not waste untill wasted"கழிவுகள் கழிவுகள் அல்ல, கழிவுகளாக மாற்றப்படும் வரை" என்பது நிர்மலின் தத்துவம். எக்ஸ்னோரா என்ற பிரதான அமைப்புடன் இணைந்து பணியாற்ற அறுபதுக்கும் மேற்பட்ட துணை அமைப்புகளை உருவாகியுள்ளார். (உதாரணமாக:- நீர்நிலைகள் பாதுகாப்பு எக்ஸ்னோரா, திடக்கழிவு மேலாண்மை எக்ஸ்னோரா, ஒலி மாசுத் தடுப்பு எக்ஸ்னோரா, பசுஞ்சிலுவை எக்ஸ்னோரா, மழைநீர் அறுவடை எக்ஸ்னோரா போன்றவை) )

சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்காக ஆங்கிலத்திலும், தமிழிலும் பல நூல்களைத் திரு.நிர்மல் அவர்கள் எழுதியுள்ளார். பொது சேவையை மறந்த நம் நாட்டினருக்கு நினைவூட்ட, ஏராளமான வெளிநாட்டுத் தொண்டு இயக்கங்கள் இந்தியாவிற்கு இறக்குமதி செய்யப்பட்டு அவையாவும் அருந்தொண்டாற்றி வருகின்றன. நிர்மல் யோசித்தார், புத்தர், காந்தி பிறந்த நாடு இது. கடை ஏழு வள்ளல்கள் உதித்த மண் தமிழகம். ஏன் இந்நாட்டிலேயே சேவை நிறுவனங்களை உருவாக்கி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யக்கூடாது என்று நினைத்தார். எக்ஸ்னோராவை உருவாக்கினார். இது வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட வேண்டும். இந்நாட்டின் சேவை மகிமையை அயல்நாட்டினரும் அறிய வேண்டும் என்ற காரணத்திற்காக தான் துவக்கிய இயக்கத்திற்கு எக்ஸ்னோரா (ExNoRa)என்ற ஆங்கிலப் பெயர் வைத்தார். EX என்றால் Excellent அதாவது "சிறந்த", NO என்றால் NOvel அதாவது புதுமையான, RA என்றால் RAdical அதாவது புரட்சிகரமான சிந்தனைகள், சொற்கள், செயல்கள் ஆகியவைகள் ஒவ்வொரு மனிதனுக்கும் சொந்தமாக இருக்க வேண்டும் என்ற சிந்தனையின் அடிப்படையில் இப்பெயரை உருவாக்கி வைத்தார். இவ்வியக்கத்தின் தமிழ்ப் பெயர் "புத்தெழில் பூமி". இந்த அமைப்பைத் துவக்கி வெற்றிகரமாக நடத்தி வந்தமைக்காக அமெரிக்க ஜனாதிபதி திரு.பில் கிளிண்டனால் அழைக்கப்பட்டு அவருடைய பாராட்டினைப் பெற்றார். பார்க்க Email: exnorainternational.org

நாட்டு நலன்

நாடு சிறக்க, செழிக்க "பொற்காலத்தை நோக்கி இந்தியா" என்ற நூலினை எழுதி அரிய ஆலோசனைகளையும், வழிமுறைகளையும் தந்துள்ளார். மக்களை இணைத்து இணையற்ற இந்தியாவை அடைவது எப்படி? என்று எண்ணி தமிழில் எடுத்துரைத்திருக்கிறார். இந்நூலை அனைவரும் படித்துச் செயல்பட்டால் இந்தியா ஏற்றம் பெற்றுவிடுவது உறுதி.

2. நாட்டின் விரோதியான இலஞ்சத்தை நிலைகுலையச் செய்ய "ஐந்தாவது தூண்"

அடுத்ததாக, இந்திய நாட்டின் விரோதியான இலஞ்சத்தை ஒழிக்க "ஐந்தாவது தூண்" என்ற வார்த்தை மற்றும் சித்தாந்தத்தை உருவாக்கி, அந்த பெயரிலேயே ஓர் அமைப்பையும் உருவாக்கி, அதற்காக மூன்று நூல்களையும் வெளியிட்டுள்ளார். தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் பிரதம மந்திரியிலிருந்து உள்ளூர் பஞ்சாயத்து கவுன்சிலர் வரை அனைவரும் முதல் தூணைச் சார்ந்தவர்கள் (Legislature). தலைமை செயலாளரிலிருந்து கிராம முன்சீப் வரை அனைத்து மத்திய மாநில அதிகாரிகள் அனைவரும் இரண்டாவது தூணைச் சார்ந்தவர்கள் (Executive). . உச்சநீதிமன்றத்திலிருந்து மாஜிஸ்ட்டிரேட் கோர்ட்டு நீதிபதி வரை உள்ளவர்கள், மூன்றாவது தூணைச் சார்ந்தவர்கள் (Judiciary). பத்திரிகை, தொலைக்காட்சி நான்காவது தூண் (Media).ஐந்தாவது தூண் என்ன? தன்னார்வம் கொண்ட தொண்டர்கள், தன்னார்வத் தொண்டு அமைப்புகள் மக்களுக்காகப் பாடுபடும் பொது அமைப்புகள் ஆகியவையே ஐந்தாவது தூண் என்கிறார் நிர்மல். இந்த இயக்கத்தை எக்ஸ்னோரா சார்பாக 1997-ஆம் ஆண்டு தொடங்கி வைத்தவர் மறைந்த பாரத ரத்னா திரு.சி.சுப்பிரமணியம் அவர்கள் ஆவார். ஐந்தாவது தூண் அமைப்பிற்காக இரண்டு அற்புத நூல்கள் எழுதியுள்ளார் நிர்மல். "லஞ்சம் வாங்குங்கள்" முதல் நூல். Corruption Made Easy .இந்நூல் இலஞ்சத்தைப் பாராட்டி (நையாண்டி செய்து) எழுதியுள்ளார். ஐம்பது வகை இலஞ்சம் நம் நாட்டிலிருக்கிறது என்று ஒரு இலஞ்ச அகராதியே தயாரித்துள்ளார். இரண்டாவது நூலின் பெயர் "இலஞ்சத்தை ஒழியுங்கள்" மக்கள் ஒன்று சேர்ந்து இலஞ்சத்தை எப்படி அடியோடு ஒழிப்பது என்று நடைமுறைப்படுத்தும் வழிமுறைகளை இந்நூலல தந்துள்ளார்.(Corruption prevention made easy) நாட்டின் விரோதி இலஞ்சத்தைப் புறமுதுகிட்டு ஓடச் செய்ய ஐந்தாவது தூண் அமைப்பின் ஆதரவுடன், தகவல் அறியும் சட்டத்தைப் பயன்படுத்தியும் (Right to Information Act) ஏராளமான பகுதிகளில் மக்கள் ஒன்றாக இணைந்து இலஞ்ச அரக்கனைத் தோல்வியுறச் செய்து வெற்றி வாகை சூடியுள்ளார்கள் என்ற செய்தி அனைவரையும் மகிழ வைக்கும்.

சமுதாய நலன்

03. சமுதாயத்தின் விரோதி சாதி, மத சச்சரவுகளைச் சரி செய்ய "மா" (for Communal Harmony)

சமுதாயத்தின் விரோதியான ஜாதி, மத, மொழி, பிரிவுகள், அதனால் உண்டாகும் பிளவுகள், பிளவுகள் ஏற்படுத்தும் பிரச்சினைகள் இவைகளைச் சரிப்படுத்த தாய்மை, குணநலனை அடிப்படையாகக் கொண்டு அதை மக்கள் கடைப்பிடித்து ஒற்றுமையாக வாழ "மா" என்ற இயக்கத்தினை உருவாக்கி அதற்கான நூலையும் வெளியிட்டுள்ளார். "மா" இயக்கத்தின் வழிகாட்டுதல்படி ஒரு மதத்தின் ஊர்வலம் போகும் போது மற்ற மதத்தினர் வரவேற்பு வளையம் வைக்கிறார்கள். ஊர்வலத்தில் செல்லும் சகோதர மதத்தினரின் நலன் கருதி தண்ணீர்ப் பந்தல் அமைக்கிறார்கள். அறிஞர், அற்புத சிந்தனையாளர், தலைச்சிறந்த எழுத்தாளர் கவிக்கோ அப்துல் ரஹ்மான் அவர்களால் தொடங்கப்பட்டு, அவருடைய ஏகோபித்த பாராட்டைப் பெற்றது "மா" சித்தாந்தம், "மா" இயக்கம் மற்றும் "மா" நூல்.

வீட்டு நலன்

04. "ஆடம்பரம்" என்ற வீட்டின் விரோதியை விரட்டி அடிக்க "இலட்சிய எளிமை"

விரலுக்குத் தகுந்த வீக்கம் வேண்டும் என்பார்கள். வீட்டின் விரோதி எதுவென்றால் வரவை மிஞ்சிச் செலவு செய்யத் தூண்டும் ஆடம்பர வாழ்க்கையே. இப்பிணியைக் குணப்படுத்த "இலட்சிய எளிமை" (Principled Simplicity) என்ற சித்தாந்தத்தை உருவாக்கி அதை நடைமுறைக்குக் கொண்டு வர அந்தப் பெயரிலேயே இயக்கத்தைத் துவக்கி அதற்கான நூல்களையும் வெளியிட்டுள்ளார்.

பெண் நலன்

05. பெண்களின் விரோதியை வழிக்குக் கொண்டு வர சர்வசக்தீ!

பெண்களின் விரோதி எதுவென்றால் பாதுகாப்பின்மை மற்றும் ஆண்களை அடிமைப்படுத்தும் மது போதை மருந்துப் பழக்கம், சூதாட்ட வழக்கம் போன்றவை. எனவே அவர்களை மாற்றவும், பெண்களின் கரத்தை வலுப்படுத்தவும், பெண்கள் முன்னேற்றத்திற்காகவும் "சர்வசக்தீ" என்ற அமைப்பைத் தொடங்கினார். இந்த அமைப்பு சிறந்த பெண் எழுத்தாளர் திருமதி.சிவசங்கரி அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டு, அவருடைய சிறந்த பாராட்டினைப் பெற்றது. இந்நூல் வெளியீட்டு விழாவில், திருமதி. சிவசங்கரி கூறினார், "அற்புத நூல் இது". இதை எழுதிய. M.B நிர்மல் அவர்களை "Master Brain நிர்மல் என்று பாராட்டினார். மது அடிமைகள் திருந்த, மது அடிமைகளின் குடும்பங்கள் ஒன்று சேர்ந்து, "குடும்பங்களின் குடும்பம்" (Family of Families) என்ற அமைப்பின் கீழ் ஒரே குடும்பமாகி மது அடிமைகளை மாற்றுவதற்கான முயற்சி மேற்கொள்வார்கள். மது அடிமைகள் தங்களைத் தாங்களாகவே திருத்திக் கொள்ள "நமக்கு நாம்" என்ற அமைப்பையும் உருவாக்கியுள்ளார். அதற்கான நூல்களை எழுதி வெளியிட்டுள்ளார்.

தனி மனிதன் நலன் மற்றும் முன்னேற்றம் "நான் சங்கம்" ("I" Club)

தனி மனிதன் ஒழுக்கம், வளர்ச்சி ஆகியவற்றை அடைய "நான் சங்கம்" ("I" Club) என்ற அமைப்பை உருவாக்கியுள்ளார். தனி மனிதனிலிருந்து, குடும்பம், சமுதாயம், நாடு மற்றும் உலகம் வரை செழிக்க, சிந்தித்து செயல்பட்டு வருகிறார். ஏழாவது அறிவு என்ற பயிற்சியையும் அளித்து வருகிறார். பயிற்சியில் பங்கு கொள்பவர்களை உறுப்பினர்களாகக் கொண்டு "ஏழாவது அறிவு சமுதாயம்" (Seventh Sense Society) என்ற புதுமையாகச் சிந்திக்கும் சிந்தனையாளர்கள் கொண்ட இந்த அமைப்பையும் உருவாக்கியுள்ளார்.

Enjoy life Every movement - TD

இதே போன்று சமுதாயத்தின் மற்றப் பிணிகளைக் குணப்படுத்த வேறு பன்னிரண்டு அமைப்புகளைத் தொடங்கியுள்ளார். நாட்டில் பொதுப் பணிகளில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ளாத மனிதர்கள் 99 விழுக்காடு. இவர்களை இழுக்க, ஈர்க்க இவர்கள் மூலம் இந்தியாவை முன்னுதாரண நாடாக மாற்ற உலகத்தை உயர்த்த இவ்வமைப்புகளை நடத்தி வருகிறார். நீங்களும் இவ்வமைப்புகளில் சேரலாம். நிர்மலோடு இணைந்து இவ்வுலகத்தை மாற்றலாம்.

Add Tamil bio data

மொழி நலன்

கடைசியாக ஒரு அவசரச் செய்தி, ஆபத்தான செய்தியும் கூட

#றீலீதிளீ; நி+ளீஜீ

பூமியைக் குளிர்விக்கும் பணிக்குத் தோள் தாருங்கள்

இந்த ஆண்டு தொடக்கத்தில் பிப்ரவரி மாதம் பாரிஸ் நகரில் உலகத்தின் அனைத்து நாடுகளைச் சார்ந்த கிட்டத்தட்ட 2500 விஞ்ஞானிகள் ஒன்று கூடி சூடாகும் பூமி பிரச்சனைப் பற்றி விவாதித்தனர். அதன் விளைவாக இன்னும் ஒரு சில ஆண்டுகளிலேயே சூடாகும் பூமியால் உலகம் கடுமையான விளைவுகளை சந்திக்கும் என்ற ஒருமித்த கருத்தினை வெளியிட்டார்கள்.

மேற்கு அண்டார்டிகா பகுதியில் பனிப்பாறைகள் அனைத்தும் சீர்குலைந்து மிக மோசமான நிலையில் உள்ளன. இவை வேகமாக உருக ஆரம்பித்துவிட்டன. இவை உடைந்து சிதறினால் உலகத்தில் கடலோரங்களில் உள்ள அனைத்து கிராமங்களும், நகரங்களும் முப்பது அடி அளவில் நீருக்கடியில் போய்விடும் என்று அஞ்சப்படுகிறது.

அதே நேரத்தில் உலகத்தின் சிறந்த சுற்றுச்சூழல் வல்லுனரும் அமெரிக்க முன்னால் துணை ஜனாதிபதியுமான திரு.அல்கோர் அவர்கள் இன்னும் பத்து ஆண்டுகளில் இந்த உலகம் மக்கள் வாழத் தகுதியற்றதாகிவிடும் என்று கூறியுள்ளார்.

பூமி வெப்பமடைதலை கட்டுப்படுத்த:-

இன்று நமது பூமி எதிர்கொண்டுள்ள பெரிய அச்சுறுத்தல் எதுவென்று உங்களுக்குத் தெரியுமா? அது பூமி வெப்பமடைதல் (Global Warming) ஆகும். இயற்கை பழைய நிலைக்கு நம்மிடம் திரும்பும் வழியுடையது. இத்தகைய பாதிப்பிற்குரிய உண்மையைக் கண்திறந்து பாராமல் வாளாவிருக்கக்கூடாது. நமது பூமி சந்திக்கவிருக்கும் விளைவுகளை கண்டு கொள்ளாமல் இருந்தோமானால் அது பல இயற்கை பேரழிவுகளை பரப்பும்.

சுற்றுச்சூழல் நிபுணர்கள், விஞ்ஞானிகள் ஆகியோரின் இன்றைய உலகளாவிய பேச்சு என்னவென்றால் நிலத்தடியிலிருந்து எடுக்கும் எரி பொருளை அளவுக்கதிகமாக பயன்படுத்துவதால் காற்றில் கார்பன் தன்மை உயர்ந்துக் கொண்டே போகிறது என்பதுதான். இந்நிலவரம் பயங்கரமானதாக மாறி வருகிறது. பல ஆய்வுகள் அந்த ஒரே கருத்தையே உறுதிப்படுத்துகிறது. அதிகப்படியான நிலத்தடி எரி பொருட்களை எரிப்பது முடிவற்ற தொடர் நிகழ்வுகளை ஆரம்பித்துள்ளது. இது சங்கிலித் தொடர் விளைவு என விவரக்கப்படுகிறது.

பூமியை பாதித்துள்ள பிணி:-

 1. வளி மண்டல வெப்பம் துரிதகதியில் உயர்ந்து வருவது பனிமுடிகள் மற்றும் மலைகள் உருகுவதை வேகப்படுத்தியுள்ளது
 2. பனி முடிகள் உருகுவது கடல் மட்டம் உயர்வதற்கு காரணமாகிறது.
 3. அதன் விளைவாக கடற்கரையோரங்கள் வெள்ளத்தால் சூழப்பட்டு அழிந்து போகக்கூடும்.
 4. வெப்ப அலைகள் வலுப்பெற்று பெருமளவில் மனிதன், விலங்குகள், தாவரங்கள் அழியும்.
 5. வெப்ப அலைகள் வெப்ப சம்பந்தமான நோய்கள் பரவக் காரணமாகும்.
 6. மேலும் வனங்களில் காட்டுத் தீ பரவ வெப்பம் காரணமாகி பல தாவர இனங்கள் அதன் இருப்பிடங்கள் அழிய காரணமாகும்.
 7. வெப்பம் அதிகரிப்பால் ஏற்படும் இன்னொரு பின்விளைவு வறட்சியாகும். வெப்ப அதிகரிப்பால் பல்வேறு நோய்கள், கொசு மற்றும் பாக்டீரியா மூலம் பரவும்.
 8. பாழ் நிலங்கள் வெகுவாக அதிகரிக்கும்.
 9. கணிசமான நிலம் கடல் நீரால் மூழ்கடிக்கப்படும். அதே நேரம் பாலைவனமாதல் மூலமும், நில இழப்பு ஏற்படும். அதாவது பூமி வெப்பம் அதிகளவில் வெளிப்படுவதால் பாலைவனப் பகுதி அதிகரிக்கும்.

அதற்கான நிவர்த்தி

 1. காற்று மண்டலத்திலுள்ள கார்பன் சமன் செய்யப்படாதவரை, பூமி வெப்பம் வெகுவாக உயர்ந்து நம்மால் கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு பேரழிவுகளை உண்டாக்கும்.
 2. சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கு காரணமாக மேலும் சில அடிகளை எடுத்து வைக்க முன் வர வேண்டும்.
 3. வாகனங்களின் புகையினால் ஏற்படும் மாசைக் குறைக்க கட்டுப்பாடும், முயற்சிகளும் மேற்கொள்ள வேண்டும். இதைத் தவிர பெருமளவில் மரங்கள் நட அணிதிரண்டு செயல்பட முனைய வேண்டும்.
 4. இதற்கான பல செய்வன, செய்யக்கூடாதன உள்ளன. அவற்றில் நாம் கவனம் செலுத்தினால் இது பல மாற்றங்களை ஏற்படுத்தும்.

இதில் ஒரு நல்ல செய்தி என்னவென்றால், இங்கு பட்டியலிடப்பட்டுள்ள பெரும்பாலான பிரச்சினைகளை முழுவதும் நீக்க முடியாத போதும் கட்டுபடுத்தக்கூடியவையே. இதற்கான உங்களுக்கு ஒரு மந்திரக்கோலைத் தருகிறோம். அதுதான் "இல்ல எக்ஸ்னோரா யோகா" (Home Exnora Yoga - HEY) மற்றும் ஆட்டோ எக்ஸ்னோரா யோகா. இக்கணமே அதைப் பயன்படுத்த துவங்கவும். இந்த உலகப்பிரச்சினையை இல்ல அளிவில் சமாளிக்க முடியும். ஆட்டோவைச் சரியாக பராமரித்து மாசுவினைக் கட்டுப்படுத்த முடியும். விவரம் கீழே தரப்பட்டுள்ளது. மேலும் விவரம் தேவைப்பட்டால் பார்க்க www.homeexnora.org.

சுற்றுச்சுவருக்குள் சுற்றுச்சூழோஉ சொர்க்கம்

இல்லத்திலேயே இயற்கையைக் காப்பாற்றும் நடவடிக்கை

ஒவ்வொருவருக்கும் ஒரு உறைவிடம் உண்டு. ஒவ்வொருவரும் "இல்ல எக்ஸ்னோரா" (www.homeexnora.org) இணையத்தளத்தில் ஏற்படுத்தியுள்ள பரிந்துரையை அவர்களது இல்லங்களில் கடைப்பிடிக்க ஆரம்பித்தால், அது பெருமளவில் நன்மை தரும்.

விஷக்காற்று வெளியேற்றாத வாகனம்

ஆட்டோ விடும் புகையைக் கட்டுப்படுத்தி சுற்றுச்சூழல் மாசுபடுவதை குறைப்பதில் நாம் கவனம் செலுத்த வேண்டும். மற்றவர்களுக்கும் இதை எடுத்துச் சொல்ல வேண்டும்.

வீட்டுக்கு வீடு

நீங்கள் உங்கள் இல்லத்தைத் தூய்மையாக, பசுமையாக வைத்துக் கொண்டால் அண்டை வீட்டுக்காரர்கள், நண்பர்கள், உறவினர்கள் இதைத் தெரிந்துக் கொள்வார்கள். அவர்களும் அவரவரது இல்லங்களுக்கு இதை எடுத்துச் செல்வார்கள்.

நீங்களே செய்ய வேண்டியதெல்லாம், உங்கள் இல்லத்தில் ஆரம்பியுங்கள். உறுதியாக இது ஆக்கப்பூர்வமாக தாக்கத்தை ஏற்படுத்தும். கல் வீடாக இருந்தாலும், குடிசையாக இருந்தாலும் இதை நீங்கள் செய்யலாம். வீடு எவ்வளவு பெரியது என்பது முக்கியமல்ல. உள்ளம் எவ்வளவு பெரியது என்பதே முக்கியம். இது சம்பந்தப்பட்ட நூல்கள், பிரசுரங்கள் ஆட்டோவில் ஒரு சிறிய நடமாடும் நூலகமாக்கி பயணிகள் பயணம் செய்யும் போது படிக்க ஊக்குவிக்கப்படுவார்கள்.

இதற்கு எக்ஸ்னோரா பிரச்சாரம் செய்யும் கோஷமானது ஒருவர் அவசியம். "உலகளவில் சிந்தித்து உள்ளூர் அளவில் செயல்படுதல்" மேலும் "இல்ல அளவிலும் செய்தல்" என்பதாகும். எக்ஸ்னோரா இந்த கோஷங்களை எழுத்திலும், செயலிலும் பின்பற்றுகிறது. சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஒருவரது இல்லத்தில் துவங்குகிறது என நம்புகிறோம். குழந்தைகள் கிரியா ஊக்கியாக செயல்பட்டு குடும்ப உறுப்பினர்களை ஊக்குவித்து நமது பூமியை பாதுகாக்கும் இந்த உயரிய பணியில் அவர்களுடன் இணைந்து இல்லத்திலேயே செயல்படுவார்கள்.

"இல்ல எக்ஸ்னோரா" இணையத்தளத்தை பார்வையிட்டு கூடிய அளவிலான செயல்பாடுகளை தங்கள் இல்லத்தில் நடைமுறைப்படுத்தவும். உங்களது அண்டை வீட்டுக்காரர்கள், நண்பர்கள் மற்றும் உற்றார் உறவினர்களிடமும் தாங்கள் கற்றுக் கொண்டதை கூறவும். மின் தன்னார்வலர் ஆகுங்கள். எவ்வாறு செய்வது என்பதை இணையத்தளத்தில் விவரித்துள்ளதுபடி அனைவருக்கும் மின்னஞ்சல் மூலம் பரப்புங்கள். சுருங்கக்கூறின்,

இல்ல எக்ஸ்னோரா யோக பண்டிட் ஆகி

மற்றவர்களுக்கு கற்பியுங்கள்.

உண்மையாக சொல்வதென்றால், விநாடிகளை கணக்கிட்டுக் கொண்டிருக்கும் கடிகார குண்டு (ஜிவீனீமீ ஙிஷீனீதீ) மேல் நாம் உட்கார்ந்துக் கொண்டிருக்கிறோம். அது எந்த நேரமும் வெடிக்கலாம். இந்நிலவரத்தின் அவசரத்தை புரிந்துக் கொள்ள மேலும் தாமதமின்றி அநேகமாக வானத்திலிருந்து குதித்தது போன்ற நமக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் "ஒரு அசௌகரியமான உண்மை" (கிஸீ மிஸீநீஷீஸீஸ்மீஸீவீமீஸீt ஜிக்ஷீutலீ) படத்தை பார்க்கவும்.

உடனடியாக "எல்லா நல்ல விஷயங்களும் என்னிடமிருந்து ஆரம்பிக்கிறது" என்று உங்களுக்கு நீங்கள் கூறிக்கொண்டு இன்றே இந்த "இல்ல எக்ஸ்னோரா யோகா"வைத் துவக்கவும். வாகன மாசினைக் கட்டுப்படுத்தவும். அனைவரும் இணைந்து கூட்டி முயற்சியில் இந்த "பூமியை குளுமைப்படுத்தும்" அரிய சேவையை சாதிப்போம்.

தீர்வுகளுக்கு இணையத்தளத்தைப் பார்க்கவும்

www.homeexnora.org,
www.exnorainternational.org,

மேலும் விவரங்களுக்கு தொடர்புக் கொள்ள வேண்டிய முகவரி

M B நிர்மல்

நிறுவனர்

எக்ஸ்னோரா இண்டர்நேஷனல், ஐந்தாவது தோண், மா, வெஜ்-எட்ஜ், இலட்சிய எளிமை

044 2475 9477, 044 2475 5478, 044 4219 3596

(M) 0 98400 34900, 0 98416 88255, 093812 86568, USA 703 994 4680

மின்னனுஞ்சல்

mbnirmal@yahoo.com
mbnirmal@gmail.com
mbnirmal@hotmail.com
mbnirmal@5thpillar.org

இணையத்தளம்

www.homeexnora.org
www.exnorainternational.org
www.nirmals7thsense.com
www.thevegedge.org

ஒரு அன்பான வேண்டுகோள்:- இப்பூவுலகைக் காப்பாற்ற வழிகள் எக்ஸ்னோரா அமைப்பால் கண்டுபிடிக்கப்பட்டுவிட்டன. இவை அனைத்தும் இணையத்தளத்தில் இலவசமாக வழங்கப்பட்டுள்ளன. மக்களுக்கு இந்த செய்தி சென்றடைந்தால் போதும். உங்கள் வண்டியின் பின்புறம் கீழ்கண்ட வாசகத்தை எழுதி வைக்குமாறு அன்போடு கேட்டுக் கொள்கிறோம்.

"சூடாகும் பூமி", உயிரினங்களுக்கு ஆபத்து.

விடைகளுக்கு காண்க இணையத்தளம்

www.homeexnora.org

பெறுக "சுற்றுச்சுவருக்குள் சுற்றுச்சூழல் சொர்க்கம்"

உங்கள் வாகனம் நன்றாக பராமரிக்கப்பட்டு விஷக்காற்று வெளியேற்றம் கட்டுப்பாட்டுக்குள் இருந்தால் எக்ஸ்னோரா உங்களுக்குச் சான்றிதழ் வழங்கும். "சுற்றுச்சூழல் ஊர்தி எக்ஸ்னோரா" என்ற ஸ்டிக்கர் வழங்கப்படும். அந்த ஸ்டிக்கரில் நீங்கள் ஒட்டிக் கொள்ளலாம்.

நீங்கள் எளிதில் "செய்யக்கூடிய" - "பூமி வெப்பமடைதலை நிறுத்தும் பணிகள்" - ம.பா.நிர்மல், நிறுவனர், எக்ஸ்னோரா இண்டர்நேஷனல்

குப்பை, சாக்கடை கழிவுகளை கையாளுதல், குடித்தண்ணீரின் நல்ல தரம் மற்றும் போதுமான அளவு, வேலை வாய்ப்பின்மை, வறுமை ஆகிய உள்ளூர் பிரச்சினைகள் மற்றும் பூமி வெப்பமடைதல், வளங்களை தக்க வைத்தல் போன்ற உலகளவிலான பிரச்சினைகள் அனைத்தையும் சரிப்படுத்த ஒரே ஒரு தீர்வு இருக்க முடியுமா? இதோ இங்கே இருக்கிறது.

உங்களாலும், உங்கள் குடும்பத்தினராலும் உங்கள் இல்லம், வாகனம், பணித்தளங்களில் எளிதில் செயல்படுத்தக்கூடிய பூமியை குளுமையூட்டும் பணிகள் பற்றி பல நூறு எளிய மாதிரி செயல்விளக்கங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. தயவுக்கூர்ந்து இது குறித்து "தாங்கள் ஏற்கனவே கடைப்பிடித்து வரும் பசுமை பணிகளை" உரிய படங்களுடன் எங்களுக்குத் தெரிவித்தால் எமது இல்ல எக்ஸ்னோரா யோகா பிணிசீ இளையத்தளத்தில் சேர்த்து வெளியிட ஏதுவாயிருக்கும்.

உங்கள் இல்ல மக்கும் குப்பையை மக்கிய உரமாக மாற்றலாம்.

பழைய வாளி, டிரம், டயர், பானையை மக்க வைக்கும் கூடையாக பயன்படுத்தலாம்.

சேதடைந்த பொருட்களே பெரும்பாலும் மக்க வைக்கும் சாதனங்களாக பயன்படுத்தப்படுகிறது. எனவே தங்கள் கற்பனை திறன் மூலம் அதற்கு பொருத்தமான ஒரு பொருளை கண்டறியவும்.

மாதிரி 3. டிரம்மில் மக்க வைத்தல்:- தேவையானவை 36 மேல் மூடியுடன் & அடிப்பகுதி திறந்த 200 லிட்டர் பிளாஸ்டிக் / பிஞிறிணி டிரம்கள். தரையில் 10 மிமீ விட்டமுள்ள துழைகள் ஏற்படுத்த வேண்டும். செங்கல் ஆதாரத்தின் மேல் டிரம்மை வைக்க வேண்டும். ஒரு மேல் மூடி இருக்க வேண்டும். முக்கியமாக தோட்டக் கழிவுகளை உரமான மாற்ற இந்த தொட்டி அமைக்கப்படுகிறது. எனினும், சிறு அளவில் (10% அளவில்) சமையல் கழிவுகளை கலக்கலாம். இக்கழிவுகளை தொட்டிக்குள் போடவும். மேல் பகுதியை சமம் செய்து சிறிதளவு மண்ணை தூவவும். 60% அளவில் ஈரப்பதம் இருக்குமாறு தண்ணீர் தெளிக்கவும். எனினும் மழைநீர் தொட்டிக்குள் புகக்கூடாது. இதற்காகத்தான் மூடி பயன்படுத்தப்படுகிறது. நன்கு மக்கியவுடன் உரத்தை அவ்வப்போது எடுத்து அரை அங்குல சல்லடையில் சளிக்க வேண்டும். இதற்குப் பதிலாக கான்கீரிட் வளையங்கள் வைத்தும் தொட்டி அமைக்கலாம். (மேலும் பல மாதிரிகளுக்கு www.exnorainternational.org இணையத்தளத்தைப் பார்க்கவும்).

மாதிரி 4. மண்புழு உரம் தயாரிப்பு:- இடத்திற்கேற்ப பொருத்தமாக குழிகள், சிமெண்ட் தொட்டிகள், உரைக்கிணறு வளையங்கள், மரம் மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் இவற்றில் ஏதாவது ஒன்றை பயன்படுத்தி உரக்குழிகள் அமைக்கலாம். உரம் தயாரிக்கும் இடத்தை மேட்டுப்பாங்கான உயரமான இடத்தில் ஒரு கொட்டகையின் கீழ் தேர்வு செய்வது உகந்தது. அப்பொழுதுதான் மழைக்காலங்களில் உரக்குழியில் தண்ணீர் தேங்குவதை தவிர்க்கலாம். மழை அதிகம் உள்ள பகுதிகளில் குழி முறையில் எரு தயாரிப்பதை தவிர்ப்பது நல்லது. ஒரு வருடத்தில் சில நாட்கள் மட்டுமே மழை பெய்யும் பகுதிகளில், வெள்ளப் பெருக்கினால் குழிகளுக்கு பெருமளவில் ஊறு விளையாது என்பதால், உள்ளூர் மண்புழுக்கள் பயன்படுத்தப்படுகிறது. மண்புழு உரக்குழியின் பாசல் லேயர் எனப்படும் முதல் தட்டு மண்புழு படுக்கை, உடைந்த கூழாங்கற்களை (3-4 செமீ) கொண்டு அமைக்கப்படுகிறது. அதையடுத்து அடுத்த தட்டு முறையான வடிகாலை உறுதிப்படுத்தும் வகையில் பருமணலை வைத்து மொத்தம் 6-7 செமீ கனத்தில் அமைக்கப்படும். அதையடுத்து 15 செமீ அளவில் ஈரப்பதம் உள்ள களிமண் இடப்படுகிறது. இந்த மண்ணிற்குள் அப்பகுதியில் சேகரிக்கப்பட்ட 100 (50 மேலதரை வகைகள், 50 பூமிக்கடியிலுள்ள வகைகள்) மண்புழுக்கள் விடப்படும். பின்பு சிறிதளவு கனத்தில் மாட்டுச் சாணம் (புதியது அல்லது காய்ந்தது) மண்மேல் விசிறப்பட்டு அதன் மேல் 10 செமீ உயரத்திற்கு பசுந்தழைகளை வைத்து மூட வேண்டும்.

உங்கள் இல்ல திரவக்கழிவுகளை பாக்டீரியா மூலம் தோட்டத்திற்கு பாய்ச்சும் தண்ணீராக மாற்றி கழிவு நீரை பயனுள்ளதாக்கவும்.

இல்ல பாதுகாப்பு கழிவு நீர் தொட்டி (SAFETIC)

அசுத்த நீர் தொட்டி, வீடுகள் / நிறுவனங்கள், உணவு விடுதிகள், முகாம்கள், தொழிற்சாலைகள் போன்றவற்றின் குளியலறைகளிலிருந்து வெளியேறும் கழிவு நீரிலுள்ள அசுத்தத்தை கட்டுப்படுத்த பயன்படுத்துகிறது. சாக்கடையில் அழுகிய நிலையிலுள்ள கூட்டு அங்கப் பொருட்களை மாறுதலுக்குட்படாத நுண்ணுயிர்களை வைத்து உயிர் வேதியியல் மாற்றங்களுக்கு உள்ளாக்கி எளிமையான நிலைத்த திடப்பொருளாக மாற்றுவதை சாக்கடை சேற்றை சரிப்படுத்துதல் எனப்படுகிறது. இந்த இடைப்பட்ட காலத்தில், சாக்கடையானது சுத்திகரிக்கபடுகிறது. அதிலும் சுத்தப்படுத்த முடியாத அடர் திரவம் அடுத்த நிலைக்கு தள்ளப்படுகிறது. இங்கு அசுத்த நீர் தொட்டி அசுத்தங்களை படிய வைத்தல், கழிவு நீர் சுத்திகரிப்பு, தேக்கி வைத்தல் ஆகிய பணிகளை இணைத்து செயல்படுத்துகிறது.

தங்களால் தயாரிக்கப்பட்ட எரு மற்றும் சுத்திகரிக்கப்பட்ட கழிவு தண்ணீரைக் கொண்டு இல்ல இயற்கை பண்ணை, மாடி பண்ணை, வான் பண்ணை உருவாக்கலாம். வீட்டு மாடி மற்றும் வீட்டை சுற்றியுள்ள காலி இடத்தை இது போன்ற பணிக்கு பயன்படுத்தலாம்.

வீட்டு பண்ணை மற்றும் மாடித்தோட்டம்

பசுமை முகப்பு இல்லம்

பசுமை இல்ல முகப்பை ஏற்படுத்த நீங்கள் குறிப்பிடத்தக்க குட்டை மற்றும் புதர் ரகச் செடிகளை நடலாம். இந்த வகை செடிகளில் அற்புதம் என்னவென்றால் 1. கிளையை வெட்டி நட்டால் அது வளரும். 2. இவைகளுக்கு மூன்று மாதத்திற்கு மேல் தண்ணீர் தேவைப்படாது. 3. கால்நடைகள் இதை சாப்பிடாது. இதை உருவாக்க ஒருவருக்கு தேவையானது பணம் அல்ல மனம்.

உங்கள் இல்லத்தை மேலும் 12 வழிகளில் பசுமையானதாக ஆக்கலாம். இது எவ்வாறு என்பதை கற்றுக் கொள்ள இல்ல எக்ஸ்னோரா யோகா (HYE) இணையத்தளத்தைப் பார்க்கவும் www.homeexnora.org

தாங்கள் எளிதில் செய்யக்கூடிய "பூமி வெப்பமடைதலை கட்டுப்படுத்தும்" பணி

இல்ல யோகா எக்ஸ்னோரா, வாகன யோகா எக்ஸ்னோரா & பணித்தள யோகா எக்ஸ்னோரா

பூமி வெப்பமடைதல் மற்றும் அது உருவாக்கும் கடுமையான ஆபத்துக்கள் பற்றி புரிந்துக் கொள்ள இத்துடன் இணைக்கப்பட்டுள்ள இணைப்பை படிக்கவும்.

தாங்கள் செய்யும் ஒரு 120 விநாடி செயலால் "நமது கிரகத்தை பாதுகாப்போம்" சேவையில் இப்பொழுதே தங்களை இணைத்துக் கொள்ளலாம். "பூமி வெப்பமடைதலை கட்டுப்படுத்தும் பணி" & "பூமியை குளுமையூட்டும் பணி"யை உடனடியாக இப்பொழுதே ஒரு எளிய இரண்டு நிமிட முயற்சியால் ஆரம்பிக்கலாம். இத்தகவலை தங்களது தனிக்குறிப்புடன் மின்னஞ்சல் தொடர்புகள், மின்னஞ்சல் குழுமங்கள், வணிக முகவரிகள், பெயர்கள், முகவரி அட்டைகள் மூலம் தெரியப்படுத்தலாம். அவர்கள் எங்கு வாழ்கிறார்கள், என்ன மொழி பேசுகிறார்கள், எத்தகைய தட்ப வெப்ப சூழலில் வாழ்கிறார்கள் என அக்கறைப்பட தேவையில்ல. இந்த எளிமையான எளிதாக செய்யக்கூடிய "பூமியை குளுமையாக்கும் பணி"யை தாமதமின்றி அவரவர் இல்லங்களில் துவக்க வேண்டுகோள் விடுக்கவும். இந்த பயிற்சிதான் இல்ல எக்ஸ்னோரா யோகா (HEY - Home Exnora Yoga) என அழைக்கப்படுகிறது.

அவர்களையும் அவர்களது மின்னஞ்சல் தொடர்புகளுக்கு இத்தகவலை அனுப்பி வைக்க கூறி மின்னஞசல் தொடர்பு வளையங்களை ஏற்படுத்தவும். பூமி வெப்பமடைதலை கட்டுப்படுத்தும் செய்தியை அலை அலையால் அகிலம் முழுவதும் பரப்பும் அதிசய சக்தி இதற்கு இருக்கும். தாங்கள் அனுப்பும் மின்னஞ்சல் நகல்களை எங்களுக்கு அனுப்பி வைக்க வேண்டுகிறோம். இதனால் எக்ஸ்னோராவும் தங்கள் மின்னஞ்சலை பெறுபவர்களும் நமது கிரகத்தை பாதுகாப்பதற்கான கருத்துக்களை பரிமாறிக் கொள்ள முடியும்.

எங்கள் இணையத்தளம் பரிந்துரைத்துள்ள பல மாதிரிகளை அதிக அளவில் தங்களது இல்லங்களில் நடைமுறைப்படுத்தவும். அவற்றை சரிபார்க்கும் பட்டியலை வைத்துக் கொள்ளவும். தங்கள் குடும்பத்தினருடன் இக்கருத்துக்களை சீர்தூக்கிப் பார்க்கவும். அவற்றை ஒவ்வொன்றாக எடுத்துக் கொள்ளுங்கள். நாளன்றுக்கு ஒரு செயலாக ஆரம்பித்து நிறுவை செய்யவும். உங்கள் மனதை மட்டும் ஈடுபடுத்தி எளிதில் செய்யக்கூடியவற்றை மட்டும் முதலில் ஆரம்பிக்கவும். நீங்கள் புதிய சுற்றுச்சூழல் பழக்கங்களை கற்றுப் பெற முடியும். அவற்று அதிக காலம் அவகாசம் தேவையில்லை என்பதை காண்பீர்கள்.

மேலும் இக்கருத்துக்கள் தங்களது வாகனங்களுக்கும் பொருந்தும். அதிலும் செயல்படுத்துங்கள். இது தங்களது வாகன எக்ஸ்னோரா யோகா பணியின் ஒரு பகுதியாக அமையும்.

பணித்தள எக்ஸ்னோரா யோகாவை தங்களது பணித்தளம், அலுவலகம், தொழிற்சாலை அல்லது கடையில் தங்களுடன் பணியாற்றுபவர்களுக்கு அறிமுகப்படுத்தவும். (மாணவர்களை பொருத்தவரை இது பள்ளி எக்ஸ்னோரா யோகா என அழைக்கப்படும்).

தங்களுக்கு இணையத்தளம் இருந்தால், தயவு செய்து பூமியை குளுமையாக்கும் பணி என்ற தலைப்பில் HEY பின்னல் இணைப்பை தரவும் / அதிவேக இணைப்பு www.homeexnora.org

தங்கள் இல்ல அலுவலக எல்லைகளை தாண்டி சுற்று வட்டாரங்களில் இதை பரப்பும் பணியில் ஈடுபட விரும்பினால் "இல்ல எக்ஸ்னோரா யோகா" (Home Exnora Yoga) இணையத்தளத்தைப் பார்க்கவும்.

"அனைத்து நலக்காரியங்களும் என்னிடமிருந்து துவங்குகிறது" என அறைகூவல் விடுத்து அதன்படி செயல்படவும்.

மேலும் "பூமியை குளுமையூட்டும் பணி இல்லத்தில் ஆரம்பிக்கிறது" எனக்கூறி அதன்படி நடக்கவும்.

உங்கள் சாலையில் சிவிக் எக்ஸ்னோரா அமைப்பைத் துவக்கி தூய்மைப்படுத்தவும். எக்ஸ்னோரா உதவியுடன் மரங்கள் நட்டு உங்கள் சாலையைச் சோலைகளாக்கவும்.

"பூமியை குளுமையூட்டும்" கூட்டு முயற்சியில் நிச்சயமாக நாம் சாதனை படைப்போம். தங்களது முயற்சிக்கு எனது நல்லாசிகள்

 

 

 
Powered by FFMedias
Untitled Document